செவ்வாய், 9 மார்ச், 2010

பாவ மன்னிப்புக் கோருவதில் தலையாய துவா :

கீழ்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்கவாசிஆவான் .இரவில் ஓதிவிட்டு மரணித்தால் அவனும் சொர்கவாசிஆவான் என்று நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(B) லாயிலாஹா இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(B)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(B )(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(B )வு ல(க்)க பி(B )நிஃமதி(க்)க அலய்ய , வ அபூ(B )வு லக்க பி(B )தன்பீ(B ) ப(F )க்பி(F )ர்லீ ப(F)இன்னஹு லா யஃக்பி(F )ருத் துனூப(B ) இல்லா அன்(த்)த.



இதன் பொருள் :

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கதிற்குரியவன் யாரும்

இல்லை .என்னை நீயே படைத்தாய்.நான் உனது அடிமை .உனது

உடன்படிக்கையின் படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை

நடப்பேன் .நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் . நீ

எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம்

மீளுகிறேன்.எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும்

பாவங்களை மன்னிக்க முடியாது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக