செவ்வாய், 6 ஏப்ரல், 2010

விதி

நான் ஒரு நாள் வாகனத்தில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். அப்பொழுது அவர்கள் சிறுவரே! உமக்கு சில வார்த்தைகளை கற்றுத் தருகிரேன்.அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும். அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அல்லாஹ்வின் கட்டளைகளை பேணிக் கொள்ளும் அல்லாஹ் உமக்கு உதவுவான், எதைக்கேட்டாலும் அல்லாஹ்விடம் கேட்பீராக ! உதவி தேடினால் அல்லாஹ்விடம் உதவி தேடுவீராக !அறிந்து கொள்க !மக்கள் அனைவரும் ஒன்றுக் கூடி ஏதாவதொரு பொருள் கொண்டு உமக்கு பயன் வழங்க நாடினாலும், அல்லாஹ் உமக்கு எதை எழுதியுள்ளானோ அப்பொருளைக் கொன்டேத் தவிர வேறு எதனை கொண்டும் அவர்களால் உமக்கு பயன் அளிக்கவும், முடியாது இடர் இழைக்கவும் முடியாது. எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன, ஏடுகள் காய்ந்து விட்டன, தக்தீர் எனும் விதி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது. நூல்- திர்மிதி

மற்றொரு அறிவிப்பில்அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணிக்கொள் !அவனை உமக்கு முன்னால் பெற்றுக்கொள்வாய் !உமது செழிப்பான காலங்களில் அவனுக்கு நன்றி செலுத்துவாயாக !உமது கஷ்டமான காலத்தில் அவன் உமக்கு உதவுவான்.அறிந்து கொள்க !உம்மை எது வந்தடையாமல் சென்று விட்டதோ, அது உமக்கு சேர வேண்டியதல்ல.உம்மை எது வந்தடைந்து விட்டதோ அது உம்மை விட்டு தவறி சென்று விடக் கூடியதுமல்ல.அறிந்து கொள்க !நிச்சயமாக உதவி பொறுமையுடன் உள்ளது,
நிச்சயமாக மகிழ்ச்சி கஷ்டத்துடன் உள்ளது,
நிச்சயமாக துன்பம் இன்பத்துடன் உள்ளது,
அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி ) அவர்கள். நூல் திர்மிதி

திங்கள், 5 ஏப்ரல், 2010

துவா

அல்லாஹும் மஜ் அல் பீ(F ) கல்பீ(B ) நூரன், வ பீ(F ) பஸரீ நூரன் , வபீ(f)

ஸம்யீ நூரன்,வ அன் யமீனீ நூரன் ,வ அன் யஸாரி நூரன் ,வ ப(F)வ் கீ நூரன்


வ(த்)தஹ்தீ நூரன் ,வ அமாமீ நூரன், வகல்பீ(F ) நூரன் வஜ்அல் லீ நூரன் .

பொருள்:

இறைவா ! என் உள்ளத்தில் ஒளியை ஏற்படுத்து ! எனது பார்வையிலும் ,


எனதுசெவியிலும் , எனது வலப்புறமும், எனது இடப்புறமும் , எனக்கு மேலேயும்,

எனக்கு கீழேயும், எனக்கு முன்புறமும்,எனக்கு பின்புறமும் ஒளியை

எற்ப்படுத்து ! எனக்கு முழுமையாக ஒளியை எற்ப்படுத்து!

சனி, 3 ஏப்ரல், 2010

காய்ச்சலால் அவதி

நபி (ஸல் )அவர்கள் காய்ச்சலால் அவதி பட்டுக் கொண்டு இருந்த போது அவர்களிடம் நான் சென்றேன் .இறைதூதர் அவர்களே நீங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டேன் .அதற்க்கு நபி(ஸல் அவர்கள் : ஆம் உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை நான் ஒருவன் அடைந்து இருக்கின்றேன் என்று கூறினார்கள் .

நான் கேட்டேன் இதற்க்கு பதிலாக தங்களுக்கு இரண்டு மடங்கு நற்ப்பலன் கிடைக்கும் என்பதாலா? அதற்க்கு நபி (ஸல் ) அவர்கள் ; ஆம் , அப்படிதான் 'ஒரு முஸ்லிமை தைக்கும் ஒரு முள்ளாயினும் ,அதற்க்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்க்கு பதிலாக ; ஒரு மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை ' என்று கூறினார்கள் .அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) . ஆதாரம்: புகாரி


உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்(ரலி) அவர்கள் தங்களின் மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் நானும் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும் இருந்தோம். உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக் பொறுமையைக் கைக்கொள்வாயாக' எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.
(தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள்.


ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உட்காருங்கள்' என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, '(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். எனவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து 'ருகூஉ' செய்)யுங்கள். அவர் (தம் தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்' என்று கூறினார்கள்.

அதாரம்: புகாரி


புதன், 31 மார்ச், 2010

உளூ


அல்லாஹ் கூறுகிறான் :

"விசுவாசிகளே ! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால் (அதற்கு முன்னர்) உங்கள் உங்கள் முகங்களையும் ,கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக் கொள்ளுங்கள் .உங்கள் தலைகளை ( ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் " .(5 :6 )

உளூ செய்யும் போது உறுப்புகளை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள் .மேலும் அவர்களே அவ்வுறுப்புகளை இரண்டிரண்டு தடவைகளும், மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்து இருகிறார்கள் .மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை .

நுஅய்ம் அல் முஜ்மிர் கூறியதாவது :

பள்ளி வாசலின் மேற்புறத்தில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் உடன் நானும் ஏறிச் சென்றேன் .அபூஹுரைரா (ரலி)அவர்கள் உளூ செய்தார்கள் .( உளூ செய்து முடித்ததும் ) " நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூ உடைய சுவடுகளால் முகம், கை ,கால்கள் ஒளிமயமானவர்களே ! என்று அழைக்கப்படுவார்கள் .

எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில் ) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் "என நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறேன் என்றார்கள் .
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) கூறியதாவது :

தொழும் போது காற்று பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன் . அதற்கு நபி அவர்கள் " நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை தொழுகையில் இருந்து திரும்ப வேண்டாம் "என்றார்கள் . (ஆதாரம் : புஹாரி)

செவ்வாய், 30 மார்ச், 2010

செய்த சத்தியத்தை விட சிறந்ததைக் கண்டால்…


நாம்தாம் மறுமை நாளில் (காலத்தால்) பிந்தியவர்களாகவும் (அந்தஸ்தால்) முந்தியவர்களாகவும் இருப்போம். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களில் ஒருவர் தம் குடும்பத்தார் (துன்புறும் வகையில் அவர்கள்) தொடர்பாகத் தாம் செய்த சத்தியத்தில் பிடிவாதமாக இருப்பது பெரும் பாவமாகும். (அந்தச் சத்தியத்தை முறித்துவிட்டு) அதற்காக அவரின் மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ள பரிகாரத்தைச் செய்வது சிறந்ததாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி :6624-6625 அபூஹூரைரா (ரலி).

என் நண்பர்கள் என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர் - உஸ்ராப் போரே தபூக் போராகும் - அப்போது நான், ‘இறைத்தூதர் அவர்களே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படி என்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர்என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாதுஎன்று கூறினார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள், ‘அப்துல்லாஹ் இப்னு கைஸே!என்று பிலால் (ரலி) அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், ‘உங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள்அழைக்கிறார்கள். அவர்களின் அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள்என்று கூறினார்கள்.. நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ‘ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்,ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரண்டு ஒட்டகங்களையும்…” என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, ‘பிடித்துக்கொள்என்று கூறினார்கள்.
அவற்றை அப்போதுதான் ஸஅத் இப்னு உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்குவாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஒட்டிக்) கொண்டு சென்று அவர்களிடம், ‘அல்லாஹ்அல்லது இறைத்தூதர்அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துளளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்படி சொல்லக் கூறினார்கள்எனத் தெரிவியுங்கள்என்று கூறினார்கள். அவர்களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, ‘நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (நான் எந்த வாகனமும் தர மாட்டேன்என்று) கூறியதைக் கேட்டவர்களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்துவிடக் கூடாதல்லவா?’ எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், ‘(அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகிறோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம்என்று கூறினார்கள். நான் அவர்களுக்குத் தரமாட்டேன்என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.

புஹாரி :4415 அபூமூஸா (ரலி).

மெயிலில் வந்தவை