சனி, 3 ஏப்ரல், 2010

காய்ச்சலால் அவதி

நபி (ஸல் )அவர்கள் காய்ச்சலால் அவதி பட்டுக் கொண்டு இருந்த போது அவர்களிடம் நான் சென்றேன் .இறைதூதர் அவர்களே நீங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்களே என்று கேட்டேன் .அதற்க்கு நபி(ஸல் அவர்கள் : ஆம் உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை நான் ஒருவன் அடைந்து இருக்கின்றேன் என்று கூறினார்கள் .

நான் கேட்டேன் இதற்க்கு பதிலாக தங்களுக்கு இரண்டு மடங்கு நற்ப்பலன் கிடைக்கும் என்பதாலா? அதற்க்கு நபி (ஸல் ) அவர்கள் ; ஆம் , அப்படிதான் 'ஒரு முஸ்லிமை தைக்கும் ஒரு முள்ளாயினும் ,அதற்க்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்க்கு பதிலாக ; ஒரு மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்காமல் விடுவதில்லை ' என்று கூறினார்கள் .அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) . ஆதாரம்: புகாரி


உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்களின் புதல்வியார் (ஸைனப்(ரலி) அவர்கள் தங்களின் மகள் (அல்லது மகன்) இறக்கும் தறுவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களுடன் நானும் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும் இருந்தோம். உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இருந்ததாகவே நாங்கள் கருதுகிறோம். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் புதல்விக்கு சலாம் (முகமன்) சொல்லி அனுப்பியதோடு, 'அல்லாஹ் எடுத்துக் கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, நன்மையை எதிர்பார்ப்பாயாக் பொறுமையைக் கைக்கொள்வாயாக' எனக் கூறியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாக வரவேண்டுமென மீண்டும்) கூறியனுப்பினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.
(தம் புதல்வியின் வீட்டுக்குச் சென்ற) நபி(ஸல்) அவர்களின் மடியில் சுவாசிக்க முடியாமல் மூச்சுத் திணறிக்கொண்டிருந்த குழந்தை கிடத்தப்பட்டது. அப்போது நபி(ஸல்) அவர்களின் இரண்டு கண்களும் நீர் சொரிந்தன. உடனே அவர்களிடம் ஸஅத் இப்னு உபாதா(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! என்ன இது? (அழுகிறீர்களே!)' என்று கேட்டார்கள்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இது அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடியவர்களின் உள்ளங்களில் அமைத்துள்ள இரக்க உணர்வாகும். அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்' என்று கூறினார்கள்.


ஆயிஷா(ரலி) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் நோயுற்றிருந்தபோது அவர்களை உடல் நலம் விசாரிப்பதற்காகச் சிலர் வந்தனர். (அப்போது தொழுகை நேரம் வந்துவிடவே) நபி(ஸல்) அவர்கள் உட்கார்ந்தபடியே அவர்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். மக்களோ நின்றபடி தொழலாயினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உட்காருங்கள்' என்று மக்களுக்கு சைகை செய்தார்கள். தொழுகை முடிந்தபோது, '(தொழுகையை முன்நின்று நடத்தும்) இமாம் பின்பற்றப்பட வேண்டியவராவார். எனவே, அவர் (தொழுகையில்) குனிந்தால் நீங்களும் குனி(ந்து 'ருகூஉ' செய்)யுங்கள். அவர் (தம் தலையை) உயர்த்தினால் நீங்களும் (தலையை) உயர்த்துங்கள். அவர் அமர்ந்து தொழுதால் நீங்களும் அமர்ந்தே தொழுங்கள்' என்று கூறினார்கள்.

அதாரம்: புகாரி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக