புதன், 31 மார்ச், 2010

உளூ


அல்லாஹ் கூறுகிறான் :

"விசுவாசிகளே ! நீங்கள் தொழுவதற்காக நிற்க நாடினால் (அதற்கு முன்னர்) உங்கள் உங்கள் முகங்களையும் ,கைகளை முழங்கை வரையும் கால்களை கணுக்கால்கள் வரையும் கழுவிக் கொள்ளுங்கள் .உங்கள் தலைகளை ( ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள் " .(5 :6 )

உளூ செய்யும் போது உறுப்புகளை ஒரு தடவை கழுவுவது தான் கட்டாயம் என்பதை நபி(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி உள்ளார்கள் .மேலும் அவர்களே அவ்வுறுப்புகளை இரண்டிரண்டு தடவைகளும், மும்மூன்று தடவைகளும் கழுவி உளூ செய்து இருகிறார்கள் .மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை .

நுஅய்ம் அல் முஜ்மிர் கூறியதாவது :

பள்ளி வாசலின் மேற்புறத்தில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் உடன் நானும் ஏறிச் சென்றேன் .அபூஹுரைரா (ரலி)அவர்கள் உளூ செய்தார்கள் .( உளூ செய்து முடித்ததும் ) " நிச்சயமாக எனது சமுதாயத்தவர்கள் மறுமை நாளில் உளூ உடைய சுவடுகளால் முகம், கை ,கால்கள் ஒளிமயமானவர்களே ! என்று அழைக்கப்படுவார்கள் .

எனவே உங்களில் எவருக்குத் தமது ஒளியை (அவர் உளூ செய்யும் உறுப்புகளில் ) நீளமாக்கிக் கொள்ள முடியுமோ அதனைச் செய்து கொள்ளட்டும் "என நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டு இருக்கிறேன் என்றார்கள் .
அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆசிம் (ரலி) கூறியதாவது :

தொழும் போது காற்று பிரிவது போன்ற உணர்வு ஏற்படுவதாக நான் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டேன் . அதற்கு நபி அவர்கள் " நாற்றத்தை உணரும் வரை அல்லது சப்தத்தை கேட்கும் வரை தொழுகையில் இருந்து திரும்ப வேண்டாம் "என்றார்கள் . (ஆதாரம் : புஹாரி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக