ஞாயிறு, 7 மார்ச், 2010

அல்லாஹ்வுடைய பாதையில் ...

அல்லாஹ்வுடைய பாதையில் தங்கள் செல்வங்களைச் செலவு செய்கிறார்களே அத்தகையோரின் உதாரணம் :ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்று இருக்கிறது . அது ஏழு கதிர்களை முளைப்பித்து ,ஒவ்வொரு கதிரிலும் நூறு வித்துக்கள் உள்ளது போன்றதாகும் .இன்னும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதைமேலும்)இரு மடங்கு ஆகுகிறான்; அல்லாஹ் மிகவும் விசாலமானவன், நன்கு அறிபவன்.(அல் குர்ஆன் -2 :261 )

தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே ; மேலும், இரகசியாமாக நீங்கள் ஏழைகளுக்குக் கொடுத்தால் அது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் ; மேலும் ,அது உங்களுடைய (சில ) பாவச் செயல்க(ளின் விளைவு)களை உங்களை விட்டுப் போக்கிவிடும் ; நீங்கள் செய்பவற்றை எல்லாம் அல்லாஹ் நன்கு அறிபவன். (அல் குர்ஆன்- 2 : 271 )

(விசுவாசம் கொண்டோரே!) தங்கள் செல்வங்களை (தர்மத்திற்காக )இரவிலும், பகலிலும் ,இரகசியமாகவும் ,வெளிப்படையாகவும் செலவு செய்கிறார்களே அத்தகையோர்-( அவர்களுக்கு )அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. அவர்களுக்கு (மறுமையில்) யாதொரு பயமும் இல்லை .(இம்மையில் விட்டுச் சென்றதுப் பற்றி) அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள் . (அல் குர்ஆன் - 2 :274 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக