சனி, 6 மார்ச், 2010

நபிமொழி

ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு கிராமப்புற அரபி வந்து, ''இறைத்தூதர் அவர்களே! சொர்க்கம் - நரகத்தை அவசியமாக்கிடும் இரண்டு விஷயங்கள் என்ன? என்று கேட்டார். ''ஒருவர் அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காமல் இறந்து விட்டால், அவர் சொர்க்கத்தில் நுழைவார். அவனுக்கு எதையேனும் இணை வைத்தவனாக இறந்து விட்டால், அவன் நரகில் நுழைவான்;'' என்று கூறினார்கள்.(முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 414)


அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

''அல்லாஹ், கருணையை 100 பகுதிகளாக ஆக்கினான். தன்னிடம் 99ஐ வைத்துக் கொண்டான். ஒரு பகுதியை மட்டும் பூமியில் இறக்கினான். இந்த ஒரு பகுதி (கருணை) மூலம்தான், படைப்பினங்கள் கருணை காட்டிக் கொள்கின்றன. உதாரணமாக, ஒரு மிருகம் தன் கால் குளம்பு தன் குட்டியின் மீது படுவதை பயந்ததாக உயர்த்திக் கொள்கிறது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 420 )


அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:

''நிச்சயமாக இறை மறுப்பாளர் ஒரு நன்மையைச் செய்தால், அதன் மூலம் இவ்வுலகில் அவனுக்கு உணவாக (கூலி) கொடுக்கப்படும். இறை நம்பிக்கையாளன் நன்மை செய்தால், நிச்சயமாக அல்லாஹ் அவனுக்காக அவனது நன்மைகளை மறுமைக்காக சேகரிக்கிறான். மேலும் இவ்வுலகிலேயே அவனது வழிபாட்டிற்காக உணவை அவனுக்கு வழங்குகிறான்'' என்று கூறினார்கள். (முஸ்லிம்)

மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு உள்ளது):

''நிச்சயமாக அல்லாஹ், இறை நம்பிக்கையாளனுக்கு ஒரு நன்மைக்காக அநீதம் செய்ய மாட்டான். அதற்காக இம்மையில் கூலி கொடுக்கப்படும். மேலும் அதற்காக மறுமையிலும் கூலி கொடுக்கப்படுவான். இறை மறுப்பாளன் அல்லாஹ்வுக்குரிய செயல்களைச் செய்தால் நன்மைகளை இவ்வுலகிலேயே கொடுக்கப்படுவான். மறுமையை அவன் அடைகிறபோது, அவனுக்கு கூலிக் கொடுக்கப்படத்தக்க நன்மை எதுவும் இருக்காது.'' (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 428)

''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''.நூல்: புகாரி,முஸ்லிம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக