புதன், 24 மார்ச், 2010

தொழுகை

உளூ :

அமல்கள் யாவும் எண்ணங்களை பொறுத்ததே என நபிகள் நாயம் (ஸல்) அவர்கள் தெரிவிகிறார்கள். (புஹாரி)

உளூ செய்யும் போது மனதில் அல்லாஹ்விற்காக வுளு செய்கிறேன் என்று நிய்யத் இருக்க வேண்டும்.அப்படி இல்லை என்றால் அது உளூ ஆகாது .


நான் நபி(ஸல்) அவர்களுக்கு உளூ செய்ய தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன் ,நபி அவர்கள் உளூ செய்தார்கள் .அப்போது அவர்கள் பின்வரும் துவாவை ஓதக் கேட்டேன் .(அறிவிப்பவர் :அபூமூஸஸ் அஷ்அரீ(ரழி)


அல்லாஹும் மக்பிர்லீ தன்பீ வவஸ்ஸிஃலீ ஃ பீதாரீ வ (B )பாரிக்லீ ஃ பீ ரி(zஜ்)கீ(q) .
யா அல்லாஹ் என் பாவத்தை மனித்தருள் ,என் வீட்டில் தாராள நிலையை அமைத்தருள், என் வருமானத்தில் அபிவிருத்தி செய்தருள் !


உளூ செய்தபின் :


அஷ்ஹது அன்ன லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷாரீக்க லஹு வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு .

பொருள் :

நிச்சயமாக வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை .அவன் தனித்தவன்.அவனுக்கு ஈடு இணை இல்லை.முகமது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியார் என்றும் ,அவனது திருத்தூதர் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன்.

இதை வுளூ செய்த பின் ஒருவர் கூறுவாரே ஆனால் அவருக்காக சொர்கத்தின் எட்டு வாசல்களும் திறந்து வைக்கப்படும்.நான் விரும்பிய வாசல் வழியாக அவர் அதில் நுழைவார் என்று நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள் .அறிவிப்பவர் உமர் (ரழி)



தொழுகை:


அமல்களில் சிறந்த அமல் தொழுகையாகும்.

முதலில் சுத்தம் அவசியம். தூய்மையான உடலோடும்,உள்ளத்தோடும் மட்டுமே இறைவனை வணங்க வேண்டும் .

ஜமாத்தாக தொழும் போது அருகில் நிற்பவரின் தோளோடு நெருக்கமாக நிற்க வேண்டும் .

இறைவன் மீது அச்சத்தோடு, இறைவன் நம்மை பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்ற உள்ளுணர்வோடும் தொழ வேண்டும் .

விரைவாகவோ, பிறருக்கு காண்பிக்கவோ தொழுதல் கூடாது.

உங்களில் ஒருவருக்கு ஹதஸ்(காற்றுப்பிரிதல் ) ஏற்ப்பட்டால் மறுபடி உளூ செய்யாதவரை அவரது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என நபி (ஸல்)கூறுகிறார்கள் .


பள்ளி வாசலில் நுழைந்ததும் ஓதும் துவா :


அல்லாஹும் மப்(F )தஹ் லீ அப்(B )வாப(B ) ரஹ்ம(த்)திக்க

பொருள் :

இறைவா! உன் அருள் வாசல்களை எனக்காக திறந்து வைப்பாயாக .

ஒருவர் பள்ளி வாசலில் தொழுவதற்காக போனதும் அமர்வதற்கு முன் காணிக்கை தொழுகையாக இரண்டு ரக்ஆத்துக்கள் தொழ வேண்டும் .

நபி(ஸல்) அவர்கள் அறிவிகிறார்கள் : உங்களில் ஒருவர் மஸ்ஜிதுக்குள் நுழைந்தால் உடன் இரண்டு ரக்ஆத்துக்கள் அமர்வதற்கு முன் தொழுது கொள்ளட்டும் (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்) .

பர்லான தொழுகையை குறித்த நேரத்தில் தொழ வேண்டியது கட்டாயமாகும்.
தொழுகையை ஜமாத்துடன் தொழுவதே சிறந்தது . (f )பஜிர்,இஷாவின் ஜமாத்தின் சிறப்புகளை (நன்மைகளை ) மக்கள் அறிவார்களே ஆனால் தவழ்ந்து வந்தேனும் ஜமாத்தை நிறைவேற்றுவார்கள் அறிவிப்பவர் :(அபுஹுரைரா ரழி )

எவரொருவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கீழ்படிந்த நிலையில் ,மறுமையில் அவனை சந்திக்க நினைக்கிறாரோ அவர் ஐவேளை தொழுகையையும் முறையாக தொழுது கொள்ளட்டும். மேலும் பள்ளியில் சென்று ஜமாத்துடன் நிறைவேற்றட்டும் (ஆதாரம் :முஸ்லிம் )

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்.அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் தொழுகையில் உள்ளச்சதொடும் குறித்த நேரத்தோடும் பேணுவார்கள் .


யார் தொழுகையை பேணிக்கொள்கிறார்களோ மறுமைநாளில் அவருக்கு அத்தொழுகை பிரகாசமாகவும் ,அத்தாட்சியாகவும் ,ஈடேற்றமாகவும் ஆகிவிடும் .மேலும் எவன் அதைப் பேணிக்கொள்ளவில்லையோ அவனுக்கு அத்தொழுகை பிரகாசமாகவோ, அத்தாட்சியாகவோ, ஈடேற்றமாகவோ மறுமைநாளில் இருக்காது.அவன் மறுமையில் காரூன் .பிர்அவ்ன்,காமான் ,கஃப் ,உபைபின் ஆகியோருடன் இருப்பான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக