புதன், 17 மார்ச், 2010

மண்ணறை வேதனை :

ஒருவர் மரணம் அடைந்து அவரை அடக்கம் செய்தவுடன் அவரிடம் நீல நிற கண்களை உடைய முன்க்கர் ,நகீர் என்ற இரண்டு மலக்குகள் வருவார்கள் ,அவர்கள் இறந்த மனிதரிடம் நபி (ஸல்) அவர்களிக் குறித்து ,இந்த மனிதரை பற்றி நீ என்ன சொல்கிறாய் என்று கேட்ப்பார்கள்.அவன் மூமினாக இருந்தால் 'நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய திருத்தூதரும் ஆவார்கள் 'எனப் பதில் கூறுவான் .

அப்போது மலக்குகள் கூறுவார்கள் நீ இவ்வாறு கூறுவாய் என நாம் ஏற்கனவே அறிந்தோம் .அதனை தொடர்ந்து அவனது கப்ர் 70 முழங்கள் விசாலமாக்கப்படும் .ஒளி ஏற்றப்படும் .அப்போது மலக்குகள் அவனிடம் 'நீ உறங்குவாய்யாக .மிக விருப்பத்திற்குரிய ஒருவரை தவிர வேறு யாரும் உன்னை எழுப்பாத வரை நீ உறங்குவாயாக' என கூறுவார்.அன்றிலிருந்து அவன் மறுமை நாள் வரை உறங்கிக் கொண்டே இருப்பான் .

இறந்தவர் ஒரு முநாபிக்காக இருந்தாலும் அவரிடம் இதே கேள்வி கேட்கப்படும் ; அப்போது அவன் 'எனக்கு அவரைப்பற்றி தெரியாது மக்கள் சொல்ல கேட்டு இருக்கிறேன்' எனக் கூறுவான். அவனிடம் மலக்குகள் 'நீ இவ்வாறு கூறுவாய் என நாம் அறிவோம் எனக் கூறுவார்.
அப்போது அவன் மண்ணறைக்கு அவனை நெருக்குமாறு உத்தரவு இடப்படும் .அவனது விலா எலும்புகள் ஒன்றோடு ஒன்று பிண்ணிக் கொள்ளும் அளவிற்கு அவனை மண்ணறை நெருக்கும் .மேலும் இரும்பு சுத்திகளால் அவன் அடிக்கபடுவான். அப்போது அவன் அலறும் அலறல் மனிதர்கள்,ஜின்கள் தவிர மற்ற அனைத்துமே செவியுறும் அளவிற்கு அவன் அலறல் இருக்கும் .அல்லாஹ் அவனை எழுப்பும் மறுமை நாள் வரை அவன்வேதனைப்படுத்தப்பட்டு கொண்டே இருப்பான்.(திர்மிதி: அபூஹுரைரா (ரலி )

இறந்தவரின் உடலை ஜனாஸா பெட்டில் வைத்து தூக்கிச் செல்லும் போது அது நல்லறம் புரிந்தவரின் ஜனாஸா என்றால் என்னை விரைந்து எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறும் . அது நல்லறங்கள் புரியாத ஜனாஸா என்றால் என் கைசேதமே என்னை எங்கு கொண்டு செல்கிறீர்கள் எனக் கூறும்.இவாறு கூறும் சப்தத்தை மனிதன் தவிர அனைத்தும் செவியுறும் .அந்த சப்தத்தை மனிதன் செவியுற்றால் மயங்கி விழுந்து விடுவான் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் (புஹாரி 1314 )

நபி(ஸல் அவர்கள் மதீனாவின் தோட்டம் ஒன்றிலிருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த போது கப்ரில் வேதனைப் பட்டுக் கொண்டு இருந்த இரண்டு மனிதர்களின் கூக்குரலை செவி ஏற்றார்கள் .அப்போது நபி(ஸல்)அவர்கள் , இந்த இருவரும் மண்ணறைக்குள் வேதனை பட்டுக் கொண்டு இருகின்றனர்.இவர்கள் செய்தது மிகப்பெரும் பாவசெயல் இல்லை என்றாலும் இதும் ஒரு பாவ செயலே ,ஒருவர் 'சிறு நீர்க் கழிக்கும் போது தமது உடலை மறைக்காமல் இருதவர்' . 'மற்றொருவர் மக்களிடையே கோள் சொல்லி கொண்டு திரிந்தவர் 'எனக் கூறினார்கள் .

நபி அவர்கள் எந்த ஒரு தொழுகை தொழுத போதிலும் கப்ரின் வேதனையில் இருந்து காக்குமாறு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்யாமல் இருததில்லை என ஆயிஷா (ரலி)அவர்கள் அறிவிகிறார்கள் .

அல்லாஹும்ம இன்னீ அவூது பி(B )க்க மினல் ஜுபு(B )னி வ அவூது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி வ அவூது பி(B )க்க மின் பி(F )த்னதித் துன்யா வஅவூது பி(B )க்க மின் அதாபி(B )ல் கப்(B )ரி .

பொருள் :
இறைவா! கோழைத்தனத்தை விட்டும்,தள்ளாத வயது வாழ்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். இவ் உலகின் அனைத்து சோதனைகளில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். மண்ணறை இன் வேதனையில் இருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் .(ஆதாரம் : புகாரி 2822 )

பாவச்செயல் செய்தால் நமக்கு தண்டனை மண்ணறைலேயே கிடைக்க ஆரம்பிக்கும் .மணறை இருள் சூழ்ந்து இருக்கும், நெருப்பு படுக்கை விரிக்கபெறும் .நரகத்தின் வாசல் திறந்து வைக்கப்படும்,ஒருவர் புரிந்த தீயச் செயல் துர்நாற்றமுள்ள ஒரு மனிதனைப் போல் உருவெடுத்து அவர் அருகிலேயே அமர்ந்து இருக்கும் இன்னும் பல வகைகளில் வேதனை படுதப்படுவோம் .

நல்லறங்கள் செய்தால் மண்ணறை லையே அவனுக்கு அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் , மண்ணறை விசாலமாக்கப்படும் , ஒளி பெரும் ,சொர்கத்தின் வாசல் திறக்கப்படும் அதன் வழியாக நறுமணம் வீசும், சொர்கத்தின் விரிப்புகள் விரிக்கப்படும் ,நாம் செய்த நற்செயல் அழகிய வடிவம் பெற்று நம்மை மகிழ்விக்கும் .


ஆகவே ஈமான் கொண்டோரே , நாம் செய்த தீவினைகளை எலாம் நினைத்து பார்த்து .அதற்காக பிழை பொறுக்க அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருவோம் ,நாம் தெரிந்தோ தெரியாமலோ ,வேண்டும் என்றோ செய்த அனைத்து பாவச் செயலுக்கும் மன்னிப்பு வழங்குமாறு இறைவனிடம் அழுது கேட்ப்போம் . மரணம் நம்மை வந்தடைந்து விட்டால் மன்னிப்பின் கதவுகள் அனைத்தும் மூடப்படும் .


எனவே இரவிலும் பகலிலும் பிராத்தனை ,குர் ஆன் ஓதல், தொழுதல் ,பாவத்திகாக மன்னிப்பு,இறைவனை புகழ்வது ,நல்லறங்கள் செய்வது என நல்லவற்றில் ஈடுபட்டு நமது மறுமை வாழ்க்கைகாக நன்மையை சேர்ப்போம் .எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் பாவச் செயல்கள் அனைத்தையும் மன்னித்து நம்மை சொர்க்கத்தில் ஒன்று சேர்ப்பானாக (ஆமீன் )

7 கருத்துகள்: