புதன், 10 மார்ச், 2010

அந்நாஸ் - மனிதர்கள் அத்தியாயம் -114

பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்னிர்ரஹீம் .

குல் அவூது பிரப்பி(B )ன் னாஸ் .

மலி(க்)கின் னாஸ் .

இலாஹின் னாஸ் .

மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ் .

அல்லதீ யுவஸ்விஸூ பீ(f) ஸூதூரின் னாஸ் .

மினல் ஜின்ன(த்)தி வன்னாஸ் .


இதன் பொருள் :


அளவற்ற அருளாளனும் , நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ...(ஓதுகிறேன்)


(நபியே!) நீர் கூறுவீராக : மனிதர்களின் இரட்சகனிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன் .

(அவன்) மனிதர்களின் அரசன் .


(அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) நாயன்.


பதுங்கி இருந்து வீண் சந்தேகங்களை உண்டாகுபவனான ஷைத்தானின் தீங்கை விட்டும் (நான் பாதுகாவல் தேடுகிறேன்.)


அவன் எத்தகையவன் என்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை கிளப்பி விடுகிறான் .


(இத்தகையோர் ) ஜின்களிலும் மற்றும் மனிதர்களிலும் இருக்கின்றனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக